Category Archives: Uncategorized

அன்றும், இன்றும்

திருவள்ளுவர் ஆண்டு 2050
பங்குனி 09
23.03.2019
சனிக்கிழமை

   வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.[1]

1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர்.

1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.

1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் இடையே முதலாவது போர் நடைபெற்ரது.

1889 – மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முசுலிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.

1901 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் அரசுத்தலைவர் எமிலியோ அகுயினால்டோ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

1918 – முதலாம் உலகப் போர்: செருமனியின் மூன்றாம் நாள் தாக்குதலில், பிரித்தானியாவின் 10-வது அரச மேற்கு கெண்ட் இராணுவப் பிரிவில் பெரும்பாலானோர் போர்க் கைதிகலாகப் பிடிபட்டனர்.

1919 – இத்தாலியின் மிலன் நகரில் பெனிட்டோ முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

1933 – இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1939 – அங்கேரிய வான் படைகள் சிலோவாக் வான் படையினரைத் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். சிலோவாக்-அங்கேரியப் போர் ஆரம்பமானது.

1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை சப்பானியர் கைப்பற்றினர்.

1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.

1965 – நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.

1978 – லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

1991 – சியேரா லியோனியில் 11-ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1994 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில், தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

1994 – சைபீரியாவில் உருசியாவின் ஏரோபுலொட் 593 விமானம் வீழ்ந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

1996 – சீனக் குடியரசில் அரசுத்தலைவருக்கான முதலாவது நேரடித் தேர்தல் இடம்பெற்றது. லீ டெங்-உய் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1999 – பரகுவையின் துணை அரசுத்தலைவர் லூயிசு மரியா அகானா கொல்லப்பட்டார்.

2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

2008 – இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாதில் திறக்கப்பட்டது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1749 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)

1858 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)

1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)

1882 – எம்மி நோய்தர், யூத செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1935)

1887 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)

1893 – கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974)

1907 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)

1908 – ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி

1910 – ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)

1910 – அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)

1912 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)

1916 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)

1921 – லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )

1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்

1924 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)

1929 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்

1937 – ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்

1951 – செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்

1953 – கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்

1976 – இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி

1979 – விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1986 – கங்கனா ரனாத், இந்திய நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1555 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)

1922 – அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)

1924 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)

1931 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)

1931 – சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)

1931 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)

1945 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)

1953 – ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)

1960 – சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)

1964 – யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872)

1992 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)

2000 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)

2000 – ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)

2011 – எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)

2012 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)

2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

பாக்கித்தான் தேசிய நாள்

உலக வானிலை நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

அன்றும், இன்றும்

திருவள்ளுவர் ஆண்டு 2050
பங்குனி 08
22.03.2019
வெள்ளிக்கிழமை

   வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான்.

1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.

1872 – அமெரிக்காவின் இலினொய் மாநிலம் பணிகளில் பாலினச் சமனிலை பேணப்படவேண்டும் என சட்டமியற்றியது.

1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1916 – சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.

1920 – அசெரி, துருக்கி இராணுவத்தினர் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.

1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1960 – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1972 – கருத்தடைப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1992 – அல்பேனியாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி: அல்பேனிய சனநாயகக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.

1992 – யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 – பாலத்தீனத்தின் சுன்னி இசுலாமிய அமாசு இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006 – பக்தாதில் 118 நாட்களாக பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கிறித்தவ அமைதிகாக்கும் அணியைச் சேர்ந்த மூவர் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டனர்.

2013 – தாய்லாந்தில் பர்மிய அகதி முகாம் ஒன்று தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.

2016 – பிரசெல்சு, வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1394 – உலுக் பெக், பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449)

1799 – பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879)

1868 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)

1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)

1873 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)

1877 – தி. வே. சுந்தரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 1955)

1894 – சூரியா சென், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934)

1909 – நேதன் ரோசென், இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)

1938 – கோவை மகேசன், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)

1942 – ஷீலா, தென்னிந்திய நடிகை

1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2011)

1964 – உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்

1976 – ரீஸ் விதர்ஸ்பூன், அமெரிக்க நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1832 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)

1896 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)

1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1883)

1977 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)

2004 – அகமது யாசின், பாலத்தீனத் தலைவர் (பி. 1937)

2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)

2007 – பார்துமான் சிங் பிரார், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)

2013 – சினுவா அச்சிபே, நைஜீரிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)

2016 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

     *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

உலக நீர் நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

அன்றும், இன்றும்

திருவள்ளுவர் ஆண்டு 2050
பங்குனி 07
21.03.2019
வியாழக்கிழமை

   வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான்.

1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.

1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1916 – சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.

1920 – அசெரி, துருக்கி இராணுவத்தினர் குர்தியக் கும்பல்களுடன் இணைந்து நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.

1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாடிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1960 – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1992 – யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 – பாலத்தீனத்தின் சுன்னி இசுலாமிய ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2016 – பிரசெல்சு, வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – இலண்டலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1394 – உலுக் பெக், பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449)

1799 – பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879)

1868 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)

1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)

1873 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)

1877 – தி. வே. சுந்தரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 1955)

1894 – சூரியா சென், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934)

1909 – நேதன் ரோசென், இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)

1938 – கோவை மகேசன், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)

1942 – ஷீலா, தென்னிந்திய நடிகை

1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2011)

1964 – உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்

1976 – ரீஸ் விதர்ஸ்பூன், அமெரிக்க நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1832 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)

1896 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)

1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1884)

1977 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)

2004 – அகமது யாசின், பாலத்தீனத் தலைவர் (பி. 1937)

2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)

2007 – பார்துமான் சிங் பிரார், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)

2013 – சினுவா அச்சிபே, நைஜீரிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)

2016 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

     *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊 🌴❀•┈┈•

உலக நீர் நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

அன்றும், இன்றும்

திருவள்ளுவர் ஆண்டு 2050
பங்குனி 06
20.03.2019
புதன்கிழமை

  வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.

1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும்
200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.

1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.

1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.

1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.

1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.

1942 – போலந்தில் நாட்சி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.

1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ், கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குடப்டுத்தப்பட்டார்.

1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

       *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 43 – ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17)

1615 – தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659)

1737 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)

1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832)

1828 – என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)

1904 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)

1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ, உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)

1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988)

1921 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (இ. 2011)

1925 – டேவிட் வாரன், ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)

1940 – புலவர் அரசு, தமிழக எழுத்தாளர்

1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்

1942 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

1944 – எர்வின் நேயெர், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்

1945 – எர்லிங் பிராண்ட்நெஸ், நோர்வே அரசியல்வாதி

1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1965 – வில்லியம் தால்ரிம்பில், இசுக்கொட்டிய வரலாற்றாளர்

1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி

1980 – கணேஷ் வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1986 – ரிச்சா கங்கோபாத்யாய், இந்தியத் திரைப்பட நடிகை

1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

1987 – அரிச்சரண், தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1351 – முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300)

1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642)

1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

1925 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859)

1943 – எயின்ரிச் ராபர்ட் சிம்மர், செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890)

1977 – சார்ல்ஸ் லிட்டில்டன், நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909)

2004 – யூலியானா, இடச்சு அரசி (பி. 1909)

2008 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937)

2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924)

2013 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929)

2014 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

2015 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930)

2018 – ம. நடராசன், தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

     *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

நவுரூஸ் (பாரசீக, குர்திய, சொராட்டிய மக்கள்)

பன்னாட்டு சோதிட நாள்

உலகக் கதை படிக்கும் நாள்

விடுதலை நாள் (தூனிசியா, பிரான்சிடம் இருந்து 1956)

உலக சிட்டுக்குருவிகள் நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

அன்றும், இன்றும்


திருவள்ளுவர் ஆண்டு 2050

      பங்குனி 05
      19.03.2019 
     செவ்வாய்க்கிழமை

     வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது.

1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.

1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 – அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

1920 – அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்ததி நிராகரித்தது (முதல் தடவை 1919 நவம்பர் 19 இல் நிராகரித்திருந்தது).

1931 – அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து.

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என இட்லர் ஆணையிட்டார்.

1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

1958 – நியூயார்க்கில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 24 பேர் உயிரிழந்தனர்.

1962 – அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1964 – பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்திற்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 – 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.

1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 – போக்லாந்து போர்: அர்கெந்தீனப் ப் படையினர் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.

2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2004 – சீன குடியரசின் அரசுத்தலைவர் சென் சூயி-பியான் சுடப்பட்டார்.

2008 – ஜிஆர்பி 080319பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.

2011 – லிபிய உள்நாட்டுப் போர்: கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, பிரெஞ்சு வான் படை லிபியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – ஈராக்க்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 98 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.

2016 – பிளைதுபாய் 981 விமானம் உருசியாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.

2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1077 – அப்துல் காதிர் அல்-ஜிலானி, ஈராக்கிய சூபி அறிஞர் (இ. 1165)

1206 – குயுக் கான், மங்கோலியப் பேரரசர், 3வது கான் (இ. 1248)

1844 – மினா கேந்த், பின்லாந்து ஊடகவியலாளர் (இ. 1897)

1903 – வி. ஏ. அழகக்கோன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1973)

1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)

1919 – டி. கே. பட்டம்மாள், தமிழக கருநாடக இசைப் பாடகி (இ. 2009)

1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ அதிகாரி (இ. 2014)

1928 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)

1928 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2011)

1933 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர்

1933 – எம். பி. என். பொன்னுசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர்

1943 – மார்யோ மோன்டி, இத்தாலியப் பிரதமர்

1952 – மோகன் பாபு, தெலுங்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

1978 – ரங்கன ஹேரத், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

      *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)

1890 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், கல்வியாளர், ஆரியசமாசத்தின் தலைவர் (பி. 1864)

1927 – அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1876)

1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (பி. 1875]])

1978 – மடபூஷிய அனந்தசயனம், இந்திய அரசியல்வாதி (பி. 1891)

1979 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1901)

1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)

1987 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1892)

1988 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணைக் கலைஞர் (பி. 1917)

1998 – சித்தி ஜுனைதா பேகம், தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் (பி. 1917)

1998 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (பி. 1909)

2008 – ஆர்தர் சி. கிளார்க், பிரித்தானிய-இலங்கை அறிபுனை எழுத்தாளர் (பி. 1917)

2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

     *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புனித யோசேப்பு நாள் (கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•