திருவள்ளுவர் ஆண்டு 2050
ஐப்பசி 08
25.10.2019
வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

🖌1147 – முதலாம் அஃபொன்சோ தலைமையில் போர்த்துகீசர் லிஸ்பன் நகரைப் பிடித்தனர்.

🖌1415 – அஜின்கோர்ட் நகரில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியின் படைகள் பிரான்சைத் தோற்கடித்தனர்.

🖌1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் டச்சு கப்டன் டேர்க் ஹார்ட்டொக். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஹார்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

🖌1760 – மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான்.

🖌1900 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் மாநிலத்தை இணைத்துக்கொண்டது.

🖌1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்ஷெவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.

🖌1918 – அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் தாண்டதில் 353 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

🖌1935 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1936 – ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பேர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.

🖌1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.

🖌1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.

🖌1973 – இசுரேல்-எகிப்து இடையல் நடைபெற்ற யோம் கிப்பூர்ப் போர் முடிவுற்று சீனாய் இடைக்கால உடன்படிக்கைக்கு வழிநடத்தியது.

🖌1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

🖌1983 – ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.

🖌1991 – யூகொஸ்லாவிய இராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றாக வெளியேறியது.

🖌1995 – கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.

🖌2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

🖌2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

🖌2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு நடுவண் அரசு தடை விதித்தது.

🖌2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.

*🔵பிறப்புகள்*

🖌1811 – எவரிஸ்ட் கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1832)

🖌1881 – பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973)

🖌1973 – றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட், இலங்கை துடுப்பாட்ட வீரர்

*🔵இறப்புகள்*

🖌1400 – ஜெஃப்றி சோசர், ஆங்கில இலக்கிய மேதை. (பி 1340)

🖌2005 – நிர்மல் வர்மா, ஹிந்தி எழுத்தாளர் (பி. 1929)

🖌1980 – ஸாகிர் லுதியானவி, ஹிந்தித் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1921)

*🔵சிறப்பு தினம்*

🖌கசக்ஸ்தான் – குடியரசு தினம் (1990)

📍🌴🐯🕊🇮🇳🕊🐯🌴📍