ஆண்டு 2050
ஐப்பசி 07
24.10.2019
வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் (Chartres Cathedral ) பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

1851 – யுரேனஸ் கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் லாசல் கண்டுபிடித்தார்.
(William Lassell discovers the moons Umbriel and Ariel orbiting Uranus.)

1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடக்கப்பட்டது.

1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

1960 – சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1964 – வடக்கு ரொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று ஜாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.

2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

*📍பிறந்தவர்கள்📍*
1914 – இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012)
1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)
1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்
1940 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர்
1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை
1980 – லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

*📍மறைந்தவர்கள்📍*
1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922)
2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928)

*சிறப்பு நாள்*
அந்தோனி மரிய கிளாரட் திருவிழா
உலக இளம்பிள்ளை வாத நாள்
விடுதலை நாள் (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)
ஐக்கிய நாடுகள் நாள்.

📍🌴🐯🕊🇮🇳🕊🐯🌴📍