திருவள்ளுவர் ஆண்டு 2050
புரட்டாசி 23
10.10.2019
வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.

1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.

1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.

1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.

1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.[1]

1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1942 – சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.

1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.

1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.

1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1970 – மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.

1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.

1975 – பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.

1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.

1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.

1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.

1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.

2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.

2015 – துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

2018 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721)

1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810)

1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)

1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)

1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930)

1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)

1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991)

1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)

1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001)

1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)

1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008)

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)

1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008)

1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்

1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995)

1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு

1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்

1954 – ரேகா, இந்திய நடிகை

1960 – வடிவேலு, இந்திய தமிழ் நகைச்சுவை நடிகர்

1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002)

1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்

1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

680 – இமாம் உசைன், 3வது சியா இமாம், முகம்மது நபியின் பெயரர் (பி. 626)

827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800)

1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)

1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானிய அறிவியலாளர் (பி. 1687)

1929 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1844)

1930 – அடால்ஃப் எங்கிளர், செருமனிய தாவரவியலாளர் (பி. 1844)

1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)

1973 – லுட்விக் வான் மீசசு, உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)

1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)

1988 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (பி. 1906)

1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர்

1997 – டி. ஜெ. அம்பலவாணர், யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)

2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916)

2004 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர் (பி. 1952)

2011 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (பி. 1941)

2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937)

2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931)

2016 – ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

மர நாள் (போலந்து)

படைத்துறையினர் நாள் (இலங்கை)

தலைநகர் விடுதலை நாள் (வியட்நாம்)

விடுதலை நாள் (பிஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)

விடுதலை நாள் (கியூபா, எசுப்பானியாவிடம் இருந்து, 1868)

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

உலக மனநல நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•