திருவள்ளுவர் ஆண்டு 2050
புரட்டாசி 21
08.10.2019
செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.

1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.

1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.

1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1879 – பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.

1895 – கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.

1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.

1918 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.

1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.

1944 – இரண்டாம் உலகப் போர்: குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.

1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..

1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.

1970 – வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.

1973 – சூயசுக் கால்வாயின் இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.

1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.

1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1990 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: எருசலேமில் இசுரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1991 – குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.

2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.

2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.

2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனர் (இ. 1610)

1872 – மேரி பென்னிங்டன், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1952)

1873 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர்,
வானியலாளர் (இ. 1967)

1908 – என். ஆர். இராசவரோதயம், இலங்கை அரசியல்வாதி (இ. 1963)

1908 – கரோலின் அந்தோனிப்பிள்ளை, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 2009)

1920 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1986)

1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)

1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)

1926 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (இ. 1996)

1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்

1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்

1944 – ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை) இந்தி திரைப்பட நடிகை

1949 – சிகர்னி வேவர், அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர்

1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்

1969 – டைலன் நீல், கனடிய-அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர்

1977 – லட்சுமி மஞ்சு, இந்திய-அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1638 – இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612)

1936 – பிரேம்சந்த், இந்திய உருது எழுத்தாளர் (பி. 1880)

1958 – திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1879)

1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)

1967 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883)

1974 – பி. ஆர். பந்துலு, தென்னிந்திய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் (பி. 1911)

1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902)

2003 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)

2010 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (பி. 1948)

2010 – ரெ. சண்முகம், மலேசியக் கவிஞர் (பி. 1934)

2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)

இந்திய வான்படை நாள்
மர நாள் (நமீபியா)

குழந்தைகள் நாள் (ஈரான்)

விடுதலை நாள்
(குரோவாசியா, யுகோசுலாவியாவிடம் இருந்து, 1991)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•