திருவள்ளுவர் ஆண்டு 2050
புரட்டாசி 11
28.09.2019
சனிக்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 48 – எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.

235 – போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார்.

935 – பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.

1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான்.

1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான்.

1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார்.

1781 – அமெரிக்கப் புரட்சி: அமெரிக்கப் படைகள் பிரெஞ்சுக் கடற்படைகளின் உதவியுடன் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரை முற்றுகையிட்டன.

1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.[1]

1844 – முதலாம் ஒஸ்கார் சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1868 – சல்கொலேயா போரை அடுத்து எசுப்பானியாவின் அரசி இரன்டாம் இசபெல்லா பிரான்சுக்குத் தப்பி ஓடினார்.

1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

1889 – நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.

1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.

1901 – பிலிப்பீனியத் தீவிரவாதிகள் கிழக்கு சமார் பகுதியில் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

1919 – அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களில் மூவர் இறந்தனர்.

1928 – அலெக்சாண்டர் பிளெமிங் தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சாவா செருமனியிடம் வீழ்ந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாட்சிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.

1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.

1951 – சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன.

1960 – மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1961 – டமாசுகசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது

1970 – எகிப்தியத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர் மாரடைப்பினால் காலமானார்.

1992 – பாக்கித்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேப்பாளத்தில் மலையில் மோதியதை அடுத்து, அதில் பயணம் செய்த அனைத்து 167 பேரும் உயிரிழந்தனர்.

1993 – யாழ்ப்பாணத்தில் கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.

1995 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் காசாக் கரை தொடர்பான இடைக்கால உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

1995 – பாப் டெனார்டு என்ற பிரெஞ்சு போர் வீரன் தனது கூலிப் படைகளுடன் சேர்ந்து கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினான்.

2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.

2009 – கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.

2018 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 551 – கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479)

1852 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1907)

1852 – இசிசு போகுசன், பிரித்தானிய வானியலாளர் (இ. 1945)

1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், புரட்சியாளர் (இ. 1931)

1918 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (இ. 1970)

1920 – வீ.கே, ஈழத்து ஓவியர், எழுத்தாளர்

1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி

1932 – விக்டர் அரா, சிலி நாட்டுப் பாடகர், இயக்குநர் (இ. 1973)

1934 – பிரிஜிட் பார்டோ, பிரான்சிய நடிகை

1947 – துரை. மனோகரன், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்

1947 – சேக் அசீனா, வங்காளதேசத்தின் 10வது பிரதமர்

1955 – ஸ்ரொபோன் டியோன், கனடிய அரசியல்வாதி

1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1968 – நவோமி வாட்ஸ், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகை

1974 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்

1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1982 – ரன்பீர் கபூர், இந்திய நடிகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

935 – முதலாம் வென்செஸ்லாஸ், செக் நாட்டுப் புனிதர் (பி. 907)

1694 – காப்ரியல் மௌடன், பிரான்சியக் கணிதவியலாளர், இறையியலாளர் (பி. 1618)

1891 – ஏர்மன் மெல்வில், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1819)

1895 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய இயற்பியலாளர், நுண்ணுயிரியலாளர் (பி. 1822)

1953 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)

1970 – ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1918)

1978 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (பி. 1912)

1989 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவர் (பி. 1917)

1991 – சங்கர் குஹா நியோகி, இந்திய-சத்தீசுக்கர் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1943)

1994 – கே. ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிகர் (பி. 1917)

1998 – சாருமதி, ஈழத்துக் கவிஞர் (பி. 1947)

2004 – முல்க் ராஜ் ஆனந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1906)

2012 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்திய அரசியல்வாதி, 1வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1928)

2016 – சிமோன் பெரெஸ், இசுரேல் பிரதமர், அரசுத்தலைவர் (பி. 1923)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

ஆசிரியர் நாள் (சீனக் குடியரசு)

உலக வெறிநாய்க்கடி நோய் நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•