திருவள்ளுவர் ஆண்டு 2050
ஆவணி 28
14.09.2019
சனிக்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.

786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார்.[1]

1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1808 – பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன.

1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் அவனது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார்.

1914 – ஆத்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஏஈ1 பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.

1917 – உருசியப் பேரரசு அதிகாரபூர்வமாகக் உருசியக் குடியரசானது.

1940 – அங்கேரிய இராணுவம் உள்ளூர் அங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு டிரான்சில்வேனியாவில் 158 உருமேனியர்களைப் படுகொலை செய்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.

1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960 – அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார்.

1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1979 – அஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982 – லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.

1985 – மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1992 – எர்செக்-பொசுனியா தனிநாடாகப் பிரிந்தது சட்டபூர்வமற்றது என பொசுனியா எர்செகோவினாவின் அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1997 – இந்தியாவின் மத்தியப் பிரதேசம், பிலாசுப்பூர் மாவட்டத்தில் விரைவுத் தொடர்வண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

1999 – கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன.

2000 – எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இறந்தவரக்ளுக்கான நினைவுகூர்தல் நிகழ்வு வாசிங்டன் தேசியப் பேராலயத்தில் இடம்பெற்றது.

2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003 – ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005 – நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008 – உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

2015 – ஈர்ப்பு அலைகள் குறித்த முதலாவது அவதானிப்பு அறிவிக்கப்பட்டது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1769 – அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட், செருமானியப் புவியியலாளர், நாடுகாண் பயணி (இ. 1859)

1774 – வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (இ. 1839)

1853 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கை அரசியல்வாதி (இ. 1924)

1879 – மார்கரெட் சாங்கர், அமெரிக்க செயற்பாட்டாளர், பாலியல் கல்வியாளர் (இ. 1966)

1914 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 1984)

1922 – கு. இராமலிங்கம், தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)

1923 – ராம் ஜெத்மலானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2019)

1927 – யூ. ஆர். ஜீவரத்தினம், தமிழகத் திரைப்பட நடிகை, பாடகி (இ. 2000)

1932 – மா. க. ஈழவேந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, தமிழறிஞர்

1937 – ரென்சோ பியானோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர்

1939 – சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்

1951 – தன்கன் ஆல்டேன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்

1965 – திமித்ரி மெட்வெடெவ், உருசியாவின் 3வது அரசுத்தலைவர், பிரதமர்

1973 – நாஸ், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

1974 – பிரியா ராமன், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை

1983 – ஏமி வைன்ஹவுஸ், ஆங்கிலேய பாடகர் (இ. 2011)

1989 – லோகன் ஹென்டர்சன், அமெரிக்கப் பாடகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

407 – யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர், புனிதர் (பி. 347)

1321 – டான்டே அலிகியேரி, இத்தாலியக் கவிஞர் (பி. 1265)

1712 – ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1625)

1852 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1769)

1901 – வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (பி. 1843)

1985 – ஜான் ஹோல்ட், அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (பி. 1923)

2002 – லூயிஸ் வீரபிள்ளை, இரியூனியன்-பிரான்சிய அரசியல்வாதி (பி. 1934)

2011 – ரூடால்ஃப் மாஸ்பவர், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1929

2015 – கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)

2015 – இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

இந்தி மொழி நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•