திருவள்ளுவர் ஆண்டு 2050
ஆவணி 08
25.08.2019
ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று

*நிகழ்வுகள்*
1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார்.

1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

1830 – பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது.

1875 – ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மேத்யூ வெப் பெற்றார்.
(Captain Matthew Webb becomes the first person to swim across the English Channel, traveling from Dover, England, to Calais, France, in 21 hours and 45 minutes)

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் செருமனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.

1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

1980 – ஜிம்பாப்வே ஐக்கிய நாடுகள் அவை.யில் இணைந்தது.

1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.

1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக்க் கிட்டவாகச் சென்றது.

1991 – லினசு டோர்வால்டுசு லினக்சு இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.

*பிறந்தவர்கள்*
1906 – கிருபானந்த வாரியார், சமயச் சொற்பொழிவாளர் (இ 1993)
1906 – கிட்டப்பா, நடிகர், பாடகர் (இ. 1933)
1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
1930 – ஷான் கானரி, ஸ்காட்டிஷ் நடிகர்
1931 – எம். கே. அர்ஜுனன், கேரளத் திரைப்பட இசையமைப்பாளர்
1952 – விஜயகாந்த், தமிழக நடிகர், அரசியல்வாதி
1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
1973 – நித்யஸ்ரீ மகாதேவன், கருநாடகப் பாடகி
1987 – மோனிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

*மறைந்தவர்கள்*
1819 – ஜேம்ஸ் வாட், ஸ்காட்டிஷ்-ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1736)
1867 – மைக்கேல் ஃபாரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1791)
2012 – நீல் ஆம்ஸ்ட்ராங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)

*சிறப்பு நாள்*
விடுதலை நாள் (உருகுவை, பிரேசிலிடம் இருந்து 1825)
விடுதலை நாள் (பிரான்சு)

🌴🦁🌴🐯🕊🇮🇳🌴🦁🌴🐯