திருவள்ளுவர் ஆண்டு 2050
ஆடி 22
07.08.2019
புதன்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

🖌கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

🖌1461 – மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

🖌1819 – கொலம்பியாவின் “பொயாக்கா” என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

🖌1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

🖌1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

🖌1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

🖌1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

🖌1933 – ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

🖌1942 – இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

🖌1944 – திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

🖌1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

🖌1955 – சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

🖌1960 – கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

🖌1970 – தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

🖌1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

🖌1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

🖌2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

*🔵பிறப்புகள்*

🖌1925 – எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்

🖌1948 – கிறெக் சப்பல், ஆஸ்திரேலியத் துடுப்பாளர்

🖌1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர்

*🔵இறப்புகள்*

🖌1941 – இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)

*🔵சிறப்பு தினம்*

🖌கோட் டி ஐவரி – விடுதலை தினம் (1960)
🦁🐯🦁🐯🦁🐯🦁🐯🦁