திருவள்ளுவர் ஆண்டு 2050
ஆனி 19
04.07.2019
வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று
04.07.2019
ஜூலை 4 (July 4) கிரிகோரியன் ஆண்டின் 185 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 186 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன.

🌺🌸நிகழ்வுகள்

🖋1054 – சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் அவதானிக்கப்பட்டது.

🖋1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா ஒன்று சீன, அரேபியர்களால் the விண்மீன் Zeta டார்சு விண்மீன் கூட்டத்தில் சேட்டா விண்மீனுக்கு அருகில் அவதானிக்கப்பட்டது.

🖋1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் யெரூசலம் நாட்டு மன்னன் லூசிக்னனின் கை எனபவனை வென்றான்.

🖋1634 – நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் கியூபெக் நகரமானது.

🖋1636 – பிராவிடென்ஸ், றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

🖋1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.

🖋1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.

🖋1810 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.

🖋1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார்.

🖋1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

🖋1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.

🖋1865 – ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.

🖋1879 – ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.

🖋1886 – சுதந்திரச் சிலை பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.

🖋1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, இவ்வாண்டு 367 நாட்களை அது கொண்டது. திங்கட்கிழமை, சூலை 4 இரண்டு நாட்களாக இருந்தது.

🖋1918 – ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).

🖋1941 – நாசி ஜெர்மனியினரால் போலந்தில் “லூவோவ்” என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.

🖋1946 – 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

🖋1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.

🖋1951 – வில்லியம் ஷாக்லி இருமுனை சந்தி திரிதடையம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.

🖋1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.

🖋1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.

🖋1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.

🖋1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பியது.

🖋2006 – டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.

🖋2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

🌺🌺பிறப்புகள்

1790 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (இ. 1866)

1807 – கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)

1868 – ஹென்ரியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (இ. 1921)

1872 – கால்வின் கூலிஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் (இ. 1933)

1898 – குல்சாரிலால் நந்தா, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1998)

1910 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (இ. 2010)

1959 – விக்தோரியா அபுரீல், எசுப்பானிய நடிகை

🐚🐚இறப்புகள்

965 – ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

1826 – ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1735)

1826 – தாமஸ் ஜெஃவ்வர்சன், ஐக்கிய அமெரிக்காவின் 3வது குடியரசுத் தலைவர்(பி. 1743)

1831 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது குடியரசுத் தலைவர்(பி. 1758)

1850 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. 1759)

1902 – சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் சமயத் தலைவர் (பி. 1863)

1910 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1835)

1918 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், (பி. 1868)

1926 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய மதகுரு (பி. 1901)

1934 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (பி. 1867)

1992 – கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)