திருவள்ளுவர் ஆண்டு 2050
ஆனி 18
03.07.2019
புதன்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

🖋324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான்.

🖋987 – ஹியூ காப்பெட் என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.

🖋1250 – பிரான்சின் ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால் பிடிபட்டான்.

🖋1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.

🖋1754 – ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.

🖋1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை வகித்தார்.

🖋1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.

🖋1778 – புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.

🖋1844 – ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.

🖋1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.

🖋1867 – தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

🖋1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.

🖋 1872 – யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

🖋1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.

🖋1944 – இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

🖋1962 – பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.

🖋1969 – சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.

🖋1970 – பிரித்தானிய விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

🖋1988 – அமெரிக்க போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.

🖋2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.

🏵🎖பிறப்புகள்

1883 – பிரான்ஸ் காஃவ்கா, எழுத்தாளர் (இ. 1924)

1918 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (இ. ஜூலை 18 1974

1924 – எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் அதிபர்

1928 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப் பாடகர் (இ. அக்டோபர் 31 1990)

1942 – அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்

1962 – டாம் க்ரூஸ், அமெரிக்க நடிகர்

1980 – ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் வீரர்