திருவள்ளுவர் ஆண்டு 2050
வைகாசி 27
10.06.2019
திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

🖋🖋1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.

🖋🖋1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

🖋🖋1801 – சிவகங்கையின் சின்னமருது “ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

🖋🖋1838 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

🖋🖋1846 – கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

🖋🖋1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.

🖋🖋1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

🖋🖋1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

🖋🖋1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

🖋🖋1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.

🖋🖋1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.

🖋🖋1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.

🖋🖋1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

🖋🖋1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

🖋🖋1945 – ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

🖋🖋1956 – இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

🖋🖋1967 – இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.

🖋🖋1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

🖋🖋 1986 – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

🖋🖋 1990 – இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

🖍🖍1996 – வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

🖋🖋 1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

🖋🖋1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

🖋🖋2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

🖋🖋2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

☘🌱பிறப்புகள்

1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி

1971 – பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்

🎋🎍இறப்புகள்

கிமு 323 – மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)

1836 – அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)

2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)