திருவள்ளுவர் ஆண்டு 2050
வைகாசி 09
23.05.2019
வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டாள்.

1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.

1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது.

1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத் தன்னை அறிவித்தார்.

1829 – வியன்னாவில் சிரில் டேமியன் என்பவருக்கு அக்கார்டியனுக்கான காப்புய்ரிமம் வழங்கப்பட்டது.

1844 – பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.

1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார்.

1911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.

1939 – அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐரிச் இம்லர் நேச நாடுகளின் பிடியில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

1948 – எருசலேம் நகரில் அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் படுகொலை செய்யப்பட்டார்.

1949 – மேற்கு செருமனி அமைக்கப்பட்டது.

1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.

1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

1960 – சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.

1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% பேர் ஏற்றுக் கொண்டனர்.

2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.

2008 – அனைத்துலக நீதிமன்றம் “நடுப் பாறைகள்” என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1707 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778)

1848 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (இ. 1896)

1883 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 1939)

1908 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1991)

1914 – பார்பரா வார்ட், ஆங்கிலேய பொருளியலாளர், ஊடகவியலாளர் (இ. 1981)

1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)

1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)

1951 – அனத்தோலி கார்ப்பொவ், உருசிய சதுரங்க வீரர்

1951 – அன்டோனிசு சமராசு, கிரேக்கத்தின் 185வது பிரதமர்

1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

230 – முதலாம் அர்பன் (திருத்தந்தை)

1370 – உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320)

1423 – எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328)

1895 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், கனிமவியலாளர் (பி. 1798)

1906 – ஹென்ரிக் இப்சன், நோர்வே இயக்குநர், நாடகாசிரியர் (பி. 1828)

1937 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1839)

1945 – ஹைன்ரிச் ஹிம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1900)

1949 – டபிள்யு. டபிள்யு. ஹேன்சன், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1909)

1973 – கம்பதாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916)

1974 – டி. ஏ. மதுரம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகை, பாடகி (பி. 1918)

1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899)

1996 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1934)

2001 – பா. ராமச்சந்திரன், கேரளாவின் எட்டாவது ஆளுநர், தமிழக அரசியல்வாதி (பி. 1921)

2008 – பார்கவி ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1955)

2014 – யூடித் யங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1952)

2015 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர், கணிதவியலாளர் (பி. 1928)

2016 – பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர்

2017 – ரோஜர் மூர், ஆங்கிலேய நடிகர் (பி. 1927)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

தொழிலாளர் தினம் (ஜமேக்கா)

உலக ஆமைகள் நாள்
மாணவர்கள் தினம் (மெக்சிகோ

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•