திருவள்ளுவர் ஆண்டு 2050
சித்திரை 09
22.04.2019
திங்கட்கிழமை

     வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

            *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தர்.

1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது..

1809 – ஆத்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு பேரரசு இராணுவத்திடம் தோற்றது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.

1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.

1898 – அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.

1906 – 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.

1912 – உருசியாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர நகரில் செருமனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஜயபுர என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற இட்லர் பதுங்கு அறையில் இருந்தவாறு தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, தற்கொலையே ஒரே வழியெனக் கூறினார்.

1948 – அரபு – இசுரேல் போர்: இசுரேலின் முக்கிய துறைமுக நகரான கைஃபா அரபுப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

1970 – முதலாவது புவி நாள் கொண்டாடப்பட்டது.

1972 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கக் குண்டுவீச்சுகள் அதிகரிக்கப்பட்டடதை அடுத்து, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் நகரம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1977 – ஒளியிழை முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

1983 – இட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற செருமனிய இதழ் அறிவித்தது. ஆனால் இக்குறிப்புகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது.

1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.

1997 – அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1997 – பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

2004 – வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

2005 – யப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி யப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக பன்னிப்புக் கேட்டார்.

2006 – நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.

2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

2014 – காங்கோவில் கட்டாங்கா மாகாணத்தில் தொடருந்து விபத்து ஒன்றில் 60 பேர் உயிரிழந்தனர், 80 பொஏர் காயமடைந்தனர்.

2016 – புவி சூடாதலைத் தவிர்ப்பதற்கான உதவிகள் குறித்த உடன்பாடு பாரிசு நகரில் எட்டப்பட்டது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

            *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1451 – முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)

1724 – இம்மானுவேல் கண்ட், செருமானிய மெய்யியலாளர், மானிடவியலாளர் (இ. 1804)

1870 – விளாதிமிர் லெனின், உருசிய பொதுவுடமைத் தலைவர், சோவியத் ஒன்றியத்தை நிறுவியவர் (இ. 1924)

1891 – அரோல்டு ஜெப்ரீசு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1989)

1899 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1977)

1902 – அ. இராகவன், தமிழக நுண்கலை ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 1981)

1904 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)

1909 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற யூத-இத்தாலிய மருத்துவர் (இ. 2012)

1916 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் கலைஞர் (இ. 1999)

1937 – ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்

1940 – க. சட்டநாதன், ஈழத்து எழுத்தாளர்

1945 – கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநர்

1952 – கம்லா பெர்சாத் பிசெசார், திரினிடாட் டொபாகோ குடியரசின் 7வது பிரதமர்

1962 – ஜெயமோகன், தமிழக எழுத்தாளர்

1971 – எரிக் மபியுஸ், அமெரிக்க நடிகர்

1982 – காகா, பிரேசில் கால்பந்து வீரர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

            *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

296 – காயுஸ் (திருத்தந்தை)
1616 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1547)

1866 – மத்வேய் கூசெவ், உருசிய வானியலாளர் (பி. 1826)

1942 – சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1883)

1989 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1905)

1994 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (பி. 1913)

2002 – எஸ். டி. சிவநாயகம், இலங்கை பத்திரிகையாளர், எழுத்தாளர்

2002 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)

2004 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (பி. 1944)

2013 – லால்குடி ஜெயராமன், தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

          *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புவி நாள்
கண்டுபிடிப்பு நாள் (பிரேசில்)

பெரும் இன அழிப்பு நினைவு நாள் (செர்பியா)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•