சௌராஷ்டிரா சமூகத்தின்
துக்க தினம் இன்று…..

நேற்று (20-04-2019)
சனிக்கிழமை இரவு
தமிழ் பேராசிரியர், முனைவர்,
தா. கு.சுப்பிரமணியன்
அவர்கள் காலமானார். அவர் காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

நம் சௌராஷ்டிரா சமூகத்தில்
பிரபல பின்னணிப் பாடகர்
பத்மஸ்ரீ. T. M. சௌந்தரராஜன் அவர்களுக்குப் பிறகு
உலகம் அறிந்த பிரமுகர்…

பட்டிமன்ற அறிஞர்,
ஆன்மீக சொற்பொழிவாளர்,
கம்பனை உலகரியச் செய்தவர்,
சௌராஷ்டிரா சமூகத்தின் காவலர்,
ஆழ்வார்களின் அடியவர்,
நாயகி ஸ்வாமிகளின்
தொண்டரடிப் பொடி ஆழ்வார்,
பேராசிரியர்.முனைவர் .
தா. கு.சுப்பிரமணியன் அவர்களின்
மறைவு நம் சமுகத்திற்கு
ஈடு செய்ய முடியாத இழப்பாகும்…

“கலைமாமணி” போன்ற
பல விருதுகளுக்கு
பெருமை சேர்த்துள்ள
பேராசிரியர் அவர்களின்
மறைவுக்கு
எங்கள் ஆரியன்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மஹாஜன சங்க நிர்வாகஸ்தர்கள் அனைவரும்
தங்களின் ஆழ்ந்த வருத்தங்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

பேசிப் பேசியே
நம் சமூகத்தை
உலகரியச் செய்தவர்…!
தமிழுக்கு
பெருமை சேர்த்தவர்…!
கம்பனையும்
அறன்களையும்
ஆழ்வார்களையும்
அடியவர்களிடம்
கொண்டு சேர்த்தவர்…!
பழகுவதற்கு எளியவர்…!

பேராசிரியர் அவர்களே,
தங்களால் நம் சமூகம் பெருமைகொள்கிறது….
உங்களால் நாங்கள்
பெருமை கொள்கிறோம்….
நம் சமூகத்தின் அடையாளம்
அல்லவா….நீங்கள்…!

தாங்கள்,
தங்களின் இறுதி மூச்சு வரை
தமிழுக்கு
ஆற்றிய தொண்டையும்,
நம் சமூகத்திற்கு
ஆற்றிய தொண்டையும்
இந்த சமுதாயம்
என்றென்றைக்கும்
மறவாது…

அறம் காக்கும் எங்கள்
சமுதாயக் காவலனே
வாழ்க நீ எம்மான்…

ஸ்வாமியே சரணம் ஐயப்பா…

~ S. J. ராஜன்
பொதுக்காரியதரிசி,
ஆரியன்காவு தேவஸ்தான
சௌராஷ்டிரா மஹாஜன சங்கம்,
234,சர்ச் ரோடு,அண்ணா நகர்,
மதுரை – 625 020