பொள்ளாச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஆர்.மூகாம்பிகை ரத்னம் என்பவர். இவர் யார் தெரியுமா?

நேர்காணலே வித்தியாசமாக நடத்திய கமல், வேட்பாளர் பட்டியலையும் அப்படித்தான் அறிவித்துள்ளார். அதில் அனைவரையும் ஈர்க்கும் பெயர் மூகாம்பிகை ரத்னம் என்னும் பெண் வேட்பாளர்.

பைக்ரேசர்

மக்கள் நீதி மய்ய கட்சியின் பெண் உறுப்பினர் என்று மட்டும் இவரை நினைத்துவிட வேண்டாம். இவருக்கு பின்னால் மிகப்பெரிய சாதனைகள் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளர்தான் மூகாம்பிகை. இவர் ஒரு பைக் ரேசர். கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர்.

நலிந்த_கலைகள்

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம், பெண் வலிமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சாலைப் பயணம் மேற்கொண்டவர். மேலும், நலிந்த கலைகளை ஊக்குவிக்க வெவ்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செல்பவர். குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நட்டு வளர்க்க செடிகள் கொடுத்தல் போன்ற முயற்சிகளை செய்து வருகிறார்.

புகார்_தந்தவர்

முக்கியமாக பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இவர்தான். அதாவது கடந்த 8-ந்தேதி தான் இவர் மய்யத்தில் இணைந்துள்ளார். அக்கட்சியின் செயலியில் இவர் அளித்த புகார் தான் செய்தியாக வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகுதான் பொள்ளாச்சி சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அக்கறை

இப்போது புரிகிறதா… துணிச்சலும், நம்பிக்கையும், வலிமையும், சமூக அக்கறையும் நிறைந்த வேட்பாளரைதான் கமல் பொள்ளாச்சியில் களம் காண அனுப்பி உள்ளார்.

மூகாம்பிகைரத்தினம்

மக்கள்நீதிமய்யம்

டார்ச்லைட்