க‌ண்களை அழகாக வை‌க்க இரவி‌ல் ‌நி‌ம்ம‌தியாக, குறை‌ந்தப‌ட்ச நேரமாவது தூ‌ங்க வே‌ண்டு‌ம்.

உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்‌ட்ச்சரைசரை பயன்படுத்தவும்.
உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நணைத்து அதனை கண்களை மூடி‌வி‌ட்டு இமையின் மீது
வைத்துக் கொள்ளவும்

கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கருவளைய‌ங்க‌ள் இரு‌க்கு‌ம் பகு‌தி‌யி‌ல் தினமும் வைத்து வரவும்.

க‌ண்களு‌க்கு ‌கீழே இரு‌க்கு‌ம் தோலை அழு‌த்‌தி தே‌ய்‌க்க‌க் கூடாது. ஏனெ‌னி‌ல் அது ‌மிகவு‌ம் மெ‌ன்மையான‌ப் பகு‌தி.

புருவங்களை திருத்திக் கொள்ள ‌சீ‌ப்பை ‌விட சு‌த்தமான டூத் பிரஷ்ஷை பயன்படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.