மு.க.அழகிரி பா.ஜ.க-வுக்கு ஆதரவு

மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று கூறி சற்று முன் திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க அழகிரி பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்!!!

தயிர் வெள்ளரிக்காய்

தயிர் வெள்ளரிக்காய்


தயிர் வெள்ளரிக்காய் செய்ய தேவையான பொருள்கள்;
தயிர் ஒரு கப்.
வெள்ளரிக்காய். 2
இஞ்சி சிறு துண்டு.
பச்சை மிள்காய் .1
கறி வேப்பிலை .ஒரு கொத்து.
பச்சைக் கொத்த மல்லி தழை..ஒரு கொத்து.
உப்பு தேவையான அளவு.
செய் முறை.;
வெள்ளரிக்காயை நன்கு தொழி சீவி புட்டு அரிப்பில் வைத்து அரிந்து கொள்ள வேண்டும்.
அப்படியே இஞ்சி துண்டையும் தொழி சீவி ..புட்டு அரிப்பிலேயே தேய்த்து வெள்ளரிக்காயுடன் சேர்த்துக் கொள்ளவும் கறிவேப்பிலை மல்லி தழை பச்ச மிளகாய் ஆகியவற்றையும் பொடிப் பொடியாக அரிந்து வெள்ளரிக் காயுடன் சேர்த்துக் கொள்ளவும் பின்பு கெட்டி தயிரை வெள்ளரிக்காயுடன் சேர்த்து தேவையான உப்பு கலந்து சிறிது நேரம் ஊற வைத்தால்..தயிர் வெள்ளரி தயார்.
இது இந்த கோடைக்கு சிறந்த உணவு.அப்படியே கிண்ணத்தில் வைத்து ஸ்பூன் கொண்டு சாப்பிடலாம்..சாம்பார் சாதம் போன்றவற்றிற்கும் தொட்டுக்கலாம்.நீர் சத்து மிகுந்த குளிச்சியான வெள்ளரி தயிருடன் சேரும் போது மேலும் சுவையாகவும் உடல் நலத்துக்கு ஏற்றதாகவும் அமைகிறது..

கரூரில் ம.மு.கூ. தேர்தல் பணிமனை திறப்பு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி 25.03.2019 காலை 10.00 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, அலங்கார் லாட்ஜ் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, கரூர் மாவட்டக் கழக பொறுப்பாளர் V.செந்தில்பாலாஜி, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கழக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, கழக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கழக விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, கழக நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வாக்காள பெருமக்கள் பெருந்திரனானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில்

திருப்பூர் மாநகர் அருகில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை திருப்பூர் மக்களுக்கு தெரியும்..?

திருப்பூர் கூலிபாளையத்தில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) உள்ளது இந்த பழமையான சோழர்கள் உருவாக்கிய கோவில்… இப்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது..

இதன் சிறப்பு:

  1. இரண்டு நந்தி கொண்ட கோவில் இது.
  2. ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.
  3. இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.
  4. இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
  5. இக்கோவிலின் வரலாறு: சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.

இன்னும் பல சிறப்பு வாய்ந்த திருப்பூர் கோவில் திருப்பூர் மக்களுக்கே தெரியாமல் உள்ளது.
கண்டிப்பாக பகிருங்கள்.

#Tiruppur #Sukteeswarar #Koil
#திருப்பூர் #சுக்ரீஸ்வரர் #கோவில்

Share Maximum and spread this epic Tirupur history to our friends..😍😘.